கடலூர், மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம்,வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் மாளிகையில், உள்ளது. இங்கு 153வது சன்மார்க்க கோடி கட்டுதல் நடைபெற்றது,

முதன் முதலாக அருட்பிரகாச வள்ளலார் 1873 (அக்டோபர் 22ஆம் தேதி) ஐப்பசி ஏழாம் தேதி வெள்ளை, மஞ்சள் கலந்து சன்மார்க்க கொடியை முதன்முதலாக மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார், சித்திபெற்ற திருஅறை உள்ளவளாகத்தில், சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தார்.

அன்று,தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி ஏழாம் தேதி, அன்று காலை 8 மணி அளவில் சன்மார்க்ககுடி உயர்த்தி வைக்கப்படுகிறது. அதேபோன்று,இந்த ஆண்டு
ஐப்பசி ஏழாம் தேதியான நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி 7 7,மணி வரை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன், நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து எட்டு மணி அளவில் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது. தொடர்ந்து ஒன்பது மணி முதல் 9.30 மணி வரை திருவருட்பா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சன்மார்க்க உரைஆற்றப்பட்டது.

சன்மார்க்க அன்பர்கள், சன்மார்க்க உரையாற்றினார்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேட்டுக்குப்பம் கிராம மக்களும் வள்ளலார் தெய்வ நிலையமும்
செய்திருந்தது –