இராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2025 கடந்த வாரம் முதல் பெய்து வருகிறது மழை வெள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்து துறைகளும் மாவட்ட முழுவதும் தயார் நிலையில் இருந்து, மழை வெள்ள பாதிப்பில் இருந்து சீரமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை 2025 தொடர் மழையின் காரணமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் தேங்கி வெளியேறாமல் இருந்து வருவதை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா பார்வையிட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.