பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்குருபூஜை முதுகுளத்தூரில் ஆலோசனைகூட்டம் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு குறித்துஆலோசனை கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகே உள்ள பசும்பொன்கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின்நினைவு ஆலயம் உள்ளது ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை மற்றும் ஜெயந்திவிழா நடைபெற்று வருகின்றது
இந்தஆண்டும் வருகின்ற அக்.28 29 30 ஆகிய மூன்று தினங்கள் குருபூஜை மற்றும் ஜெயந்திவிழா நடைபெறஉள்ளது இந்நிகழ்ச்சியில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக.மாநிலதலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை அஇபார்வர்டுபிளாக் நாம்தமிழர் தவெக தேமுதிக தமமுக மற்றும் அரசியல்கட்சி தலைவர்கள் சமுதாயஅமைப்பை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளஉள்ளனர் மேலும் முதுகுளத்தூர் கடலாடி சாயல்குடி பகுதியில் இருந்து கிராமமக்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வார்கள் இதற்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனைகூட்டம் முதுகுளத்தூரில் உள்ள தனியார் மஹாலில் டிஎஸ்பி சண்முகம் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் கிராமநிர்வாகிகளும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர் காவல் துறை அறிவுறித்திய வழித்தடங்களில்தான் கிராமமக்கள் செல்லவேண்டும் திறந்தவெளி வாகனங்களில் செல்லகூடாது அனுமதி பெற்ற வாகனத்தில்தான் செல்லவேண்டும் என காவல் துறை மூலம் தெரிவிக்கப்பட்டன ஆலோசனை கூட்டத்தில் முதுகுளத்தூர் ஆய்வாளர் செல்வராஜ் கடலாடிசாகுல்ஹமீது மற்றும் இளம்செம்பூர் பேரையூர் கீழத்தூவல் காவல்நிலைய ஆய்வாளர்கள் சார்புஆய்வாளர்கள் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் போலீசார் கலந்துகொண்டனர்
