திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் மழை நீர் தேங்காதவாறு முன்னெடுப்பு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பேரூராட்சி 1- வார்டு லாயம் புதுத் தெரு பகுதியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது, அதனையடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு பேரூராட்சி மன்ற சி.சரவணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வை.செல்வமணி ஆகியோர் முன்னிலையில், பேரூராட்சி மன்ற சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.அம்பேத்கர்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் தேங்கிய மழை நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் குடவாசல் சாலை, கும்பகோணம் – மன்னார்குடி சாலை, செட்டித்தெரு, கைலாசநாதர் கோயில் தெரு ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது, அனைத்து பகுதிகளிலும் கொட்டும் மழையில் மழை நீர் தேங்காமல் இருக்க கழிவு நீர் பாதையில் உள்ள அடைப்புகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சீரமைப்பு செய்தனர்.