சென்னை மணலி புதுநகர் இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 270 வது ப்ளாகில் உள்ள 90 ஆவது தெருவில் சாலை முழுவதும் மழைநீர் வடியாமல் தேங்கி சேரும் சகதியும் ஆக காட்சியளிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அவதி அடைந்து வருவதாகவும்

அதேபோன்று அவசரத்திற்கு அந்த வழியாக செல்வதற்கு உகந்த சாலை இல்லாமல் சேரும் சகதியமாக காட்சியளிப்பதால் பகுதி வாசிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் பள்ளிக்கு விடுமுறை விட்ட நிலையில் பணிக்கு செல்லும் மாணவர்கள் தவிர்த்து அத்தியாவசிய தேவைக்காக மார்க்கெட் செல்பவர்கள் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை இதனால் காலில் சேற்றுப்புண் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்

மணலி புதுநகர் முழுவதிலும் பல கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பகுதியில் மழை நீர் வடியாமல் சேரும் சகரியமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைவதாகவும் தேர்தல் வந்தால் மட்டுமே ஆட்சியாளர்கள் இதை செய்து விடுகிறோம் அதை செய்து விடுகிறோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசி சென்றுவிடும் நிலையில் தற்போது மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இதுவரை யாரும் இந்த பகுதியில் எட்டிக் கூட பார்க்கவில்லை எனும் மாநகராட்சி அதிகாரிகளோ ஊழியர்களோ இதுவரை அக்கறை செலுத்தவில்லை என பகுதி வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்

எனவே துறை சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்து தெருவை பார்வையிட்டு மழைநீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி வாசிகள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் போட்டு சகதியில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்