சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால்
காலமானார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழங்குடியினர் தொகுதி திமுக எம்எல்ஏ K.பொன்னுசாமி 74 மாரடைப்பால் காலமானார் பொன்னுசாமிக்கு இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 2001 சட்டமன்ற பொதுத் தேர்தலில பொன்னுசாமிக்கு போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் திமுகவில் இணைந்தார் 2006 இல் திமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சட்டப்பேரவை தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 2021 சட்டமன்றதேர்தலில் திமுக தலைமை இவருக்கு வாய்ப்பு அளித்தது சேந்தமங்கலம் பழங்குடியினர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்
