மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நான் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று, நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தினார்.
1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குத வில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைப் போற் அம் வகையில் ஆண்டுதோறும் அக் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார் தலைமை வகித்து, காவலர் நினைவுத் தூணுக்கு மவர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அர்விந்த் உள்ளிட்டோர் காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, கருணை அடிப்படை யிலான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமை வகித்து, மாநகரக் காவல் துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்கள் 5 பேரின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
