கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில்
சித்தி வளாக சுத்த சன்மார்க்கக் கொடிகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு சத்விசாரம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்ச்சி, இன்று புதன்கிழமை காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை முருகன்குடி எம். ஆர். எஸ். ஈஸ்வரா வணிக வளாகம் (கனரா வங்கி மாடியில்) வள்ளலார் பணியகத்தில் நடைபெற்றது

நிகழ்விற்கு முருகன்குடி வள்ளலார் பணியகத்தின் பொறுப்பாளர் தங்க. பன்னீர்செல்வம் தலைமைதாங்கி நடத்தினார் .

சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் தயவுத்திரு முரளி கொடி கட்டி வைத்தார் வள்ளலார் பணியகத்தின் சிறப்புத்தலைவர் நாட்டு வைத்தியர் பெரங்கியம் சிவ.வரதராஜன் திருவிளக்கு ஏற்றி வைத்து, ‘வள்ளுவர் கூறும் கொல்லாமை” என்ற தலைப்பில் சத்விசாரம் செய்தார்.

வள்ளலார் பணியகத்தின் செயலாளர் பிரதாபன் அருட்பாபாடி தொடங்கி வைத்தார்.

மேலும் பசியாற்றுவித்தல் அறப்பணியை முருகன்குடியைச் சார்ந்த சரத்குமார்- தமிழ்மணி இவர்களின் அன்புமகள் ஆதினி பிறந்தநாள் மகிழ்வாக
மேற்கொண்டனர் வள்ளலார் பணியகத்தின் பொருளாளர் ரத்தினக்குமார் நன்றி கூறி நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் சன்மார்க்க சான்றோர்கள், அன்பர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் மேலும் காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை பாரம்பரிய மருத்துவர் பெரங்கியம் சிவ வரதராஜன் கட்டணம் இல்லாத மருத்துவ ஆலோசனையும், பெண்ணாடம் சுப்பிரமணியன் வர்மா, பாதசிகிச்சை அளித்தனர்.