கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 1-7-2025 முதல் 30-10-2025 வரை 4 மாத நிலுவை தொகையை பெற்றுத்தர மாநிலத் தலைவர் வால்பாறை இடம் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் நிர்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று தர தொழிற்சங்க தலைவரிடம் வலியுறுத்தினர்.கூட்டத்துக்கு தொழிற்சங்க மாநில தலைவர் வால்பாறை வி.அமீது தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது

நிலுவைத் தொகையில் நமது தொழிற்சங்கத்திற்கு நன்கொடை ரூ. 600 பிடிப்பதை இந்த முறை வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்துக்கு நிலுவைத்தொகையில் பிடிப்பது வேண்டாம். குன்னூர், கூடலூர், வால்பாறையில் அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயர்வு பெற்றுத் தருவது என தொழிற்சங்கம் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது தொழிற்சங்கம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடப்பதை சொல்லி தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை அங்கங்க உள்ள டிவிஷன் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி தீர்வு காண வேண்டும். உங்களால் முடியாவிட்டால் தொழிற்சங்கங்த்திடம் புகார் அளித்தால் தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன்.எஸ்டேட் நிர்வாகத்தில் கூடுதலாக பெண் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும். சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லைகள் இருப்பதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்லும்போது தனியாக செல்லாமல் கூடுதல் தொழிலாளர்கள் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சுடர் பாலு, சலாவுதீன் அமீது, நரசப்பன், லோகேஸ்வரன், சாய் கிருஷ்ணா, முத்து முடி பாலன், கலைவாணன், ஜீவானந்தம், வாட்டர் பால் நடராஜ், சந்தன் ராஜ், கருமலை மயில்வாகனம், சரவணன், ஐயர்பாடி ராமன், சேக்கல் முடி அபுபக்கர், முனியாண்டி, செல்லப்பெருமாள், ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் சோலையார் பெரியசாமி நன்றி ஆற்றினார்.