வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி.

வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு கிராமத்தில் தினம் தோறும் கிராம தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைவழங்கி ஊக்கத்தொகையும் வழங்கி தீபாவளி பண்டிகையை அவர்களுடன் கொண்டாடினர். இந்நிகழ்வு தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் தொடர் சேவையும் பாராட்டும் விதமாகவும் சமூக பொறுப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மருதூர் வடக்கு கிராம இளைஞர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.