செங்குன்றம் செய்தியாளர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் ஜி .என் .டி . ரோடு , ஆயிஷா பள்ளிவாசல் எதிரில் அமைந்துள்ள அஜ்ரத் சைதானி பிபி அம்மா தர்காவில் 201 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
தர்மகத்தா சையத்காதர் உசேனி , சையத் தஸ்தகீர் உசேனி ஏற்பாட்டில் , செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசல் இமாம் காஜா மொய்தீன் ஜமாலியின் பாத்திஹா துவாவுடன் துவங்கிய இவ்விழாவில், உலக மக்கள் அமைதிக்காகவும் , மக்கள் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாய் அனைவரும் வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
சந்தனக்கூடம் மேள தாளங்களுடன் தர்காவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் செங்குன்றம் , புழல் மற்றும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் ஜாதி மத பேதமின்றி பக்தி பரவசத்துடன் தர்காவிற்கு வந்து ஹஜ்ரத் சைதானி பிபி அருளைப் பெற்று சென்றனர். அதன் பின் மௌலூது ஷரீப் ஓதப்பட்டு இஸ்லாமிய கவ்வாலி இன்னிசை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.
