ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் மாவட்ட காட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் ,கல்லூரிகள் ,பள்ளிகள் ஆகிய போன்ற இடங்களில் பீடி ,சிகரெட் ,குட்கா போன்ற புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் பல வியூகங்களில் தடுத்து வருகின்றனர் .
அதன்படி காட்டூர் அரசு பள்ளிகள் இருக்கும் இடங்களில் மாணவர்கள் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் புகைகளை விற்பனையை தடுக்கவும் புகையில்லா நகரமாக விளங்கவும், பள்ளி குழந்தைகள் ஆரோக்கியத்துடனும் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் எடுக்கவும் காவல்துறையின் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் புகையில்லா ஏரியா பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அதனை மீறி பள்ளிகள் அருகில் கடைகளில் விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
போன்று ஆவடி காவல் ஆணையரத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையத்திற்கும் இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தித் தருமாறு ஆவடி காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
