திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117- ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்து மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன் தலைமையில், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி, காளியம்மன் கோவில், கும்பகோணம் ரோட்டில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலையை அடைந்து, அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,

அதனைத் தொடர்ந்து 6 அம்சங்கள் கொண்ட தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வலங்கைமான் புங்கஞ்சேரி பகுதியில் உள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில் கழக கொடி ஏற்றப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் க.பரமசிவம், ஒன்றிய துணை செயலாளர்கள் பா. சுப்பிரமணியன், இரா.பரமசிவம், ஒன்றிய பொருளாளர் இரா.பாஸ்கர், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.கேசவன், துணை செயலாளர்கள் வி. கோபால், என்.ஞானசேகரன், ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூர் அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், துணை செயலாளர்கள் வி.சி.இராஜேந்திரன், வசந்தி பாஸ்கர், லாயம் ரமேஷ், பொருளாளர் எல்.புருசோத்தமன், மாவட்ட பிரதிநிதி எஸ்.ரவிச்சந்திரன், பேரூர் நிர்வாகிகள் வி.சதானந்தம், சி.எம்.கதிரவன், கே.செல்வமணி, ஜி.செல்வம், சிங்குதெரு எஸ்.ஆர்.ராஜேஷ், ரம்ஜான் பீவி சிவராஜ், யூ.ஆனந்த்குமார், கே.வீரமணி, சுமதி தர்மராஜன், எம்.செல்வமணி, புகழ்.மதுசோழன், ஆர்.கணேசன், எஸ்.ஜி.எஸ்.கணேஷ், எஸ்.நிரஞ்சன், கே.சரவணன், கோ.சண்முகசுந்தரம் யாதவ் மற்றும் நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.