சிஐடியூ மாநில தலைவர் அ. சவுந்தரராஜன் கேட்டில் ஆதரவு தெரிவித்து பேசினார்.
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முன்னளிவிப்பு ஏதுமின்றி தொழிலாளர்களை வேலைக்கு செல்ல அனுமதிக்காமல் கதவடைப்பு செய்துள்ளது. தொழிலாளர்கள் தொடர்ந்து நுழைவாயிலில் இருந்து போராடி வருகின்றனர்.
சிஐடியூ மாநில தலைவர் தோழர் அ.சவுந்தரராஜன் கேட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்தார். முன்னதாக விம்கோ சிஐடியூ அலுவலகத்தில் இருந்து தொழிலாளர்கள், சிபிஎம் கட்சி உறுப்பினர்கள், மாதர்சங்கத்தினர் திரளாக கூடி ஊர்வளமாக முழக்கங்களுடன் எம்ஆர்எப் கேட்டை நோக்கி சென்றனர்.
எம்ஆர்எப் கேட்டில் குழுமி இருந்த எம்ஆர்எப் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
இந்த தொழிற்சாலைத்தான் போட்டத்தை தூண்டி விட்டுள்ளது. லேஆப்பா, கதவடைப்பா, குலோசரா என்று எதையும் அறிவிக்காமல் வேலை செய்ய வந்த தொழிலாளியை வேலைக்கு செல்ல அனுமதிக்காமல் கதவை மூடியுள்ளது. தொழிலாளர்கள் வேலை நிருத்தம் செய்தால் அய்யய்யோ உற்பத்தியே போச்சி, பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இப்படி செய்தால் தமிழ்நாட்டில் யார் முதலீடு செய்வார்கள் என கூப்பாடு போடும் அரசு இந்த எம்ஆர்எப் நிருவனம் 6நாட்களாக உற்பத்தியை முடக்கி வைத்துள்ளதே. இப்போது பொருளாதாரம் சீர்கெடாதா? தமிழ்நாடு அரசு ஏன் கேட்க மறுக்கிறது. தொழிலாளர் முன்னறிப்பின்றி வேலை நிருத்தம் செய்தால் சம்பளம் பிடித்தம் செய்யும் நிர்வாகம் இன்று வேலைக்கு வந்த தொழிலாளியை வேலை செய்ய அனுமதிக்காதது நிருவளத்தின் தவறு. எனவே எத்தனை நாள் வேலைக்கு அனுமதிக்க வில்லையோ அத்தனை நாளைக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்.
நாப்ஸ்சை ஒப்புக் கொண்டால்தான் மருத்துவ காப்பீட்டிற்கான முன்பணம் வழங்குவேன் என்று நிருவனம் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. ஏற்கனவே வவழங்கி வந்த முன்பணத்தை நிருத்த கூடாது. வழங்க வேண்டும். போராடும் தொழிலார்ளுக்கு உணவு மறுப்பது மனிதாபிமான மற்ற செயல். கேன்டீனை திறக்க வேண்டும். தொழிலாளர்கள் போக்கு வரத்திற்கு பேரூந்து வசதிகளை நிருத்தக்கூடாது. தொழிலாளர்கள் எந்த நிலையிலும் கொள்கையை விட்டு கொடுக்க கூடாது. நாப்ஸை ஏற்க கூடாது. சிஐடியூ உங்களோடு சேர்ந்து நிற்கும். முதலில் பெ.ம்யலூர், அரக்கோணம், மேடக் கிளைகளையும் ஆதரவாக ஒருங்கினைப்போம். அடுத்து இங்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் தொழிலார்களை ஒருங்கினைத்து நிர்வாகத்தை பணிய வைப்போம். ஏற்கனவே பல போராட்டங்களில் எம்ஆர்எப் தொழிலாளர்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போராட்மும் நிச்சயம் வெற்றி பெறும். சிஐடியூ உங்களோடு சேர்ந்து நிற்கும் என பேசினார்.
அதற்கு முன்னதாக வடசென்னை மாவட்டச் செயலாளர் குப்புசாமி, அசோக்லேலண்ட் இணைச்செயலாளர் சுரேஸ் ஆகியோர் பேசினர். மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், கட்டுமான சங்க செயலாளர் அன்பு. மார்க்சிஸ்ட் கட்சி திருவொற்றியூர் வடக்கு பகுதி செயலாளர் கதிர்வேல், மாதர்சங்க பகுதி செயலார் அலமேலு, பகுதிக்குழு உறுப்பினர்கள் வெங்கட்டையா, புஷ்பா ஆகியோர் பங்கேற்றனர்.
