புதுச்சேரி காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு நமது மாநில கழக அமைப்பாளர். A.M.H. நாஜிம், MLA அவர்களும், M. நாக தியாகராஜன், MLA அவர்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்கள்.
அதனை தொடர்ந்து அண்ணா அரசு கலை கல்லூரியில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும் நமது மாநில கழக அமைப்பாளர் A.M.H. நாஜிம், MLA M. நாக தியாகராஜன், MLA மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாநில கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், கழக துணை அமைப்பாளர்கள், தொகுதி செயலர்கள், தொகுதி கழக நிர்வாகிகள் , கழகத்தின் அனைத்து அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ..!
