கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவமால் மருதூர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ், சிவசந்திரன் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்
அதில் நவமால் மருதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேயர்ந்த குழந்தைவேலு என்பவரின் மகன் பிரவீன் குமார் வயத(24 ) என்பவர் தனது வீட்டின் அருகே கையில் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அதில் சுமார் 2 கிலோ 490 எடை கொண்ட கஞ்சா பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது மேலும் அப்பகுதியில் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
