துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவசரவணன் தலைமையில் மதுராபுரி கிளை மற்றும் தேவாங்க நகர் கிளை கழகம் சார்பில் “தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம்” உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
இதில் நான்,தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி வரையறைக்கு எதிராக போராடுவேன்..நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் எஸ்ஐஆர் க்கு எதிராக நிற்பேன்.. நான்,நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.. நான், மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காக போராடுவேன்.. நான்,தமிழ்மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன் மதிப்பிற்கு) எதிரான எந்த ஒரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன்..நான், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன்.. உள்ளிட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஓரணியில் தமிழ்நாடு குடும்பங்களின் 5 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு “தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம்” தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்அழகன், கிளை செயலாளர் சுபாஷ், தேவாங்க நகர் கிளை செயலாளர் கண்ணன் மற்றும் ஒன்றிய பிரதிநிதி உமாபதி, ஸ்ரீதரன், முருகேசன், ராஜா, ரஹமத்துல்லா,உஷா மற்றும் மதுராபுரி கிளை இளைஞர் அணி பிரபாகரன், விஜயராகவன் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
