செங்குன்றம் செய்தியாளர்

மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சிஎம்டிஏ லாரி நிறுத்தத்தில் மழை நீர் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் இவ்விடம் வடநாட்டு லாரிகள் மற்றும் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் ஏராளமானோர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் இடமாக திகழ்கிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் பெய்த மழையால் அதிக அளவில் இங்கு மழை நீர் குளம் போல் தேங்கி முழங்கால் வரை இருக்கிறது.
இதன் அருகில் மழைநீர் கால்வாய்கள் இருந்தும் நீர் வெளியேறாமல் அசுத்த நீர் கலந்து வடியாமலும் புழல் சிறையில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறும் அசுத்த நீரும் ஒன்றாக கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதன் அருகே மாதவரம் மண்டலம் அலுவலகம் இயங்கி வருவதால் அங்கு சென்று வரும் அதிகாரிகள் கூட கவனிக்காமல் மெத்தனமாக சென்று விடுகின்றார்கள்.
அருகில் மின்சார வாரிய அலுவலகம் இயங்குவதால் அங்கு மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் முகத்தை சுளித்தவாறு மூக்கை மூடிய வண்ணம் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக அதிக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உடனே இந்த அசுத்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.