பாபநாசம் பேரூராட்சியில் 6 வார்டில் குடியான தெருவிலும், 9 வார்டில் காணியாளர் தெருவிலும், வார்டு மற்றும் பகுதி சபா கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும் செயல் அலுவலர் குமரேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன்,பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம்,இளநிலை உதவியாளர் ஹரிதாஸ்,பரப்புரையாளர்கள் சுகன்யா, ராதிகா, நான்சி பிருந்தா மற்றும் வார்டில் உள்ள பொதுமக்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது.
