பாபநாசத்தில் தெற்கு ஒன்றிய பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன்,பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பாபநாசம் திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.