மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பசுமை காப்போம், தூய்மை மீட்போம் எனும் விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் 750 மாணவர்கள் பங்கேற்றனர் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உதகை சாலையில் நடைபெற்ற ஓட்டத்தினை மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் கொடியசைத்து துவங்கி வைத்தார் .

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளிச் செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து வாழ்த்துரையாற்றினார். முறையே 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் திரிசூல், ஆகாஷ், ப்ரித்வி அக்னி ஆகிய அணிப் பிரிவுகளாகக் கலந்து கொண்டனர் . கோமகள்,. கனிஷ்கா, சஷ்ரிதா. துகிலன் ஹரீத்,. துருவன் ஆகியோர் முதலிடம் பெற்றனர், புள்ளிகள் அடிப்படையில் அக்னி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி துணை முதல்வர் முனைவர் சக்திவேல் ஆகியோர் மாணவர்களை பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியை உடற் கல்வித்துறை துணை இயக்குனர் அனிதா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்