முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்
பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி மூலம் பூரணாங்குப்பம் முழியன் குளத்தை சீர் செய்து படித்துறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல NGO – க்கலின் ஆதரவு பெறும் நிகழ்ச்சி மற்றும் தன்னார்வலருக்கு பிரமிட் விஞ்ஞானி Dr.வரதராஜன் , எற்பாட்டில் எகிப்து இன்டர்நேஷனல் சோசியல் சர்விஸ் & இன்டர் நேஷ்னல் பிரமிட் அசோசியேன் சொசைட்டி வழங்கிய சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி மூலம் சிறந்த கிராமமாக தேர்வு பெற்ற பூணாங்குப்பம் கிராமத்தின் விருது கோப்பையை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்திரு. ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூரனாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கர் முன்னிலையில் சபாநாயகர் திரு. ஏம்பலம். R. செல்வம் அவர்கள் கலந்து கொண்டு கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் சீர் செய்ய உள்ள முஷியன் குளத்தின் மாதிரி படத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் திரு .A .சுரோஷ்ராஜ். அரியாங்குப்பம் BDO திரு.கோ.கார்த்திகேசன், இன்ஜினியர் கட்டிட கலை வடிவமைப்பாளர் .திரு . N.புருஷோத்தமன், சென்னை NDSO- அறங்காவளர் திரு.J.பிரபாகர் எஸ்னோரா புதுச்சேரி தலைவர் திரு. தசரதன், சென்னை காயத்திரி சாரிடீஸ், நிறுவனர் பாலசப்ரமணியன், வில்லியனூர் பிரான்ஸ வாழ் சங்கம் திரு, காந்திராஜ் விஜய் எய்தர் பவுண்டேஷன் திருமதி.மைக்கேல் காஸ் மியார் கேக் பிரான்ஸ் யூனஸ்கோ குவாடினேட்டர் தமிழ் கலாச்சார தலைவர் திரு.சாம் விஜய் ரோட்டரி கிளப் பீச் டவுன் தலைவர் . வினோத் வர்மா லெகுன் ஹோட்டல் MD.J. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கு பெற்று விவசாயக் குளத்தை சீர் செய்யும் பணிக்கான ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் பிரான்ஸ் வாழ் தமிழ் அமைப்பில் இருந்து பிரான்ஸ் தமிழ் கலாச்சார மன்ற தலைவர் பாண்டுரங்கன் இலங்கை வேந்தன், சோழர் பண்பாட்டு கழகம் தலைவர் திரு.தெய்வபிரகாசம்,சின்றல்லா அசோஷேசன் தலைவர் திருமதி.தில்லை சரிதா மற்றும் சிக்கப்பூர் இடோன் இன்டர்நேஷ்னல் பள்ளி ஆசிரியர் கார்த்திகா பால ஆகியோர், வெளிநாட்டிலிருந்து வாழ்த்து செய்தியுடன் அமைப்பு செயலாளர் மணிஷ் நன்றி, கூறினார் இதில் பூரணாங்குப்பம் கிராம பஞ்சாயத்து பெரியோர்கள் & இளைஞர்கள் விருந்தினர்களை சிறப்பு செய்தனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தன்னார்வளர்கள் செய்திருந்தனர்.