தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கருங்குளம் செக்காரக்குடி ஊராட்சியில் ெபாதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் 15 துறையின்கீழ் 43 அரசுத்துறை சார்ந்த முகாம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 முகாமில் சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து பின்னா் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கி பொதுமக்களிடம் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலின் படி அனைவருக்கும் தேவையானவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். திமுக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா். 

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா, நயினார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லிங்கராஜ் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, செக்காரக்குடி. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி ராமலெட்சுமி, மாரியப்பன், மாயாண்டி, சேகர் மற்றும் கப்பிகுளம் பாபு, அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்