கோவையில் சந்தையை விரிவுபடுத்தும் (WorkEZ)
அலுவலக இடங்களுக்கான சேவைகளை வழங்கி வரும் ,(WorkEZ),நிறுவனம் வீராஸ் இன்ஃப்ரா நிறுவனத்துடன் இணைந்து கோவையில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அலுவலக இடங்களுக்கான ஒப்பந்தங்களை செய்துள்ளனர்..
தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட வணிகங்கள் மற்றும் ஐடி தொடர்பான துறைகளில் தென்னிந்திய அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை மாறி வருகிறது…
இந்நிலையில்,வரும் ஆண்டுகளில் நிர்வாகம் தொடர்பான அலுவலகங்களுக்கு இடங்கள் கூடுதலாக தேவைப்படும் நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் அலுவலக இட வழங்குநர்களில் முன்னனி நிறுவனமான (Work Easy Space Solutions) வொர்க் ஈஸி ஸ்பேஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ,(WorkEZ), கோவை சரவணம்பட்டியில் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவில் அலுவலக வசதிகளுக்கான இடங்களை உறுதி செய்துள்ளனர்..
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஒட்டல் அரங்கில் நடைபெற்றது…
இதில், WorkEZ இன் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான சுனில் ரெட்டி,மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரதாப் முரளி,ஆகியோர் பேசினர்..
அப்போது வொர்க் ஈசி நிறுவனம் ,முதல் கட்டமாக சரவணம்பட்டி பகுதியில் ஒரு இலட்சம் சதுர அடியில் அலுவலக தேவைகளுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும், இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக அதே பகுதியில் கூடுதலாக 2,00,000 சதுர அடி பரப்பளவை இறுதி செய்யும் தருவாயில் இருப்பதாக தெரிவித்தனர்..
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோயம்புத்தூர் சந்தையில் இருந்து மட்டும் ரூபாய் 250 கோடிக்கும் மேற்பட்ட வருவாயை வொர்கீஸ் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்…
அலுவலக பணிகளுக்கு என உலகத் தரம் வாய்ந்த சூழல் கொண்ட அலுவலகங்களை வழங்குவதில் எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் என தெரிவித்தனர்..
