பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை பேருந்து நிலையம் முன்பு 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்யம்பேட்டை காமராஜர் திருவுருவ சிலைக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர், பணியாளர்களை நிரப்ப வேண்டும்,24மணி நேரமும் மருத்துவமனை செயல்பட வேண்டும், பேருந்து நிலையத்தில் நவீன வசதியுடன் கூடிய கழிவறை கட்டிடம் அமைக்க வேண்டும், அய்யம்பேட்டை பேரூராட்சியில் அமைக்கப்படும் குடிநீர் மீட்டர்களை அகற்ற வேண்டும், பொதுமக்களுக்கு ஆதார் சேவை மையம் நிரந்தரமாக அமைக்க வேண்டும், குறிப்பிட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் தெற்கு வட்டார தலைவர் சேதுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, அய்யம்பேட்டை முன்னாள் நகர செயலாளர் மோகனசுந்தரம்,தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட, வட்டார , நகர நிர்வாகிகளும், மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.