தாராபுரம், அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து கிராம மக்கள் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட் டம் தாராபுரம் அருகே உள்ளது கொளத்துப்பா ளையம் இங்கு சுமார் 68 ஏக்கர் பரப்பில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு நூற் பாலை செயல்பட்டு வந் தது. கடந்த 2003ம் ஆண்டு நூற்பாலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நூற்பாலை வளாகம் அடர்ந்த காடு போல மாறியது. இந்நிலை யில் தொழிற்சாலைகளோ, பெரிய தொழில் கூடங் களோ எதுவுமே இல்லாத தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பொதுமக் களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் தொழிற்சாலை களை கொண்டு வரவேண்டும்.

மூடிக்கிடக்கும் கூட்டு றவு நூற்பாலை வளாகத் தில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என கொளத்துப்பாளையம் பேரூராட்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு கூட் டுறவு துறையில் இருந்து வந்த நூற்பு ஆலையை, சிப் காட் நிறுவனத்திற்கு வகை மாற்றம் செய்து அதில் தொழில் துவங்க அனுமதி அளித்தது.

சிப்காட் நிறுவனம் மூலம் அமைய இருக்கும் தொழிற்சாலைகளை தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அமைக்க கொளத்துப்பா ளையம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயம் சார்ந்த இப்ப குதியில் சிப்காட் நிறுவனத் தில் இரும்பு, தோல் பதனிடு தல்,சாயத்தொழிற்சாலை உள்ளிட்டவை துவங்கப் பட்டால் நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடும். விவ சாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும். புற்று நோய் வருவதற்குரிய சாத் தியக்கூறுகள் அதிகம் உள் ளது எனக் கூறி சிப்காட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதுகுறித்து சிப்காட் தொழிற்சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் சிப்காட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற தாமதப்படுத் தும் பேரூராட்சி நிர்வா கத்தை கண்டித்தும் நேற்று பேரூராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் சிவகுமார். விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பா ளர்கள் கோபாலகிருஷ் ணன், கோனேரிப்பட்டி பாலு,காளிதாஸ், விக் னேஷ் ஆகியோர் தலைமை யில் திரளானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட் டத்தினையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு.