திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பாக அனைத்து மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு பல விதமான விதைகள் வழங்கப்பட்டது. அவற்றை பள்ளியில் மாணவர்கள் குழ அமைத்து தனித்தனியாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி பள்ளி பசுமைப் படை ஆசிரியை நிர்மலா தேவி மாணவர்களை சிறு சிறு குழுவாக பிரித்து தனித்தனி பாத்தியில் விதைகள் காசினாக்கீரை, அரைக்கீரை மற்றும் முள்ளங்கி ஆகியவை விதைக்கப் பட்டது. பசுமைப் படை மாணவர்கள் மற்றும் பள்ளி என் எஸ் எஸ் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்றார்கள்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் பங்கு பெற்றனர்.