கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீனிவாச நகர் பிரதான சாலையில் வசித்து வரும் லோகேஷ் அவரது மனைவி கீர்த்தி லோகேஷ் தம்பதியினரின் ஆறு வயது சிறுவன் ஜெஷீஅபிஷேக் இவர் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் குளோபல் பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வருகிறார்.

இளம் வயதில் சிறுவனின் பெற்றோர்கள் தனது மகன் சாதனைகள் புரிந்து வெற்றி பெற பல பயிற்சிகளில் ஈடுபட முயற்சி செய்து அதில் வெற்றிகள் பெற ஊக்கப்படுத்தினர்.

இதன் விளைவாக (பேஜன்ட் ) ஆங்கிலத்தில் மாடலிங் என கூறப்படும் சிறந்த நடை அழகு பயிற்சிகளை பயிற்சியாளர் திவாகரிடம் ஆலோசனைகளை மேற்கொண்டு, சிறுஆணழகன் என சொல்லக்கூடிய நடை அலங்கார போட்டியில், வியட்நாம் , அர்ஜென்டினா ,மலேசியா ,ஐக்கிய அரபு நாடுகள் ,ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளுக்குச் சென்று அங்கு தனது திறமைகளை அரங்கேற்றி பல பதக்கங்களை பெற்று சிறுவன் , தற்போது 18 நாடுகள் பங்கேற்று பல போட்டியார்களை களத்தில் இறக்கிய வியட்னாமில் தனது சாதனையை அரங்கேற்ற சென்று அதில் ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் – உலக சாம்பியன் வெற்றியாளர் 2025 பட்டத்தை தட்டி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த குட்டி சாம்பியன் ஆவார்.

இவரின் பெற்றோர்கள் நம்மிடம் கூறும்போது சிறுவயதில் இவருக்கு பல வழிகளில் ஆலோசனைகள் எடுத்துரைத்து அவரை அனைவராலும் போற்றப்படும் திறமையான மாணவராக திகழவும் சாதனைகள் புரியவும் ஊக்குவித்ததில் பலனாக தற்போது உலக சாம்பியன் பட்டத்தை வென்றது எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது. மேலும் சிறுவனின் பயிற்சியாளர் திவாகர் மேலும் அவருக்கு பதக்கங்கள் குவியவும் சிறுவனின் திறமைகளை மேலும் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஜெஷீ அபிஷேக் கூறும்போது இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த எனக்கு தமிழக அரசின் முதலமைச்சரை சந்திக்க வேண்டுமென ஆவலுடன் தெரிவித்து அரசு எனக்கு உதவ வேண்டுமென தெரிவித்தார்.