கோவை கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளி மாணவர்கள் 79 எண் வடிவில் அமர்ந்து யோகா செய்து சர்வதேச யுனைடெட் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

யோகா செய்வதன் மூலம் உடலையும் -மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோவை கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளியில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது..

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளியின் தாளாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார் தலைமை ஆசிரியை சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வார்டு கவுன்சிலர் மோகன் மற்றும் அவரது மனைவி ,.சுபப்பிரியா , அன்வேஷனா மழலையர் பள்ளியின் தாளாளர் .ராமாதாஸ் , தலைமை ஆசிரியை பிரவீணா,ஆகியோர் கலந்து கொண்டனர்..

உலக சாதனை நிகழ்ச்சியில், 79 எண் வடிவமைப்பில் ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளி மாணவர்கள் 24 பேர் மற்றும் அன்வேஷனா மழலையர் பள்ளி மாணவர்கள் 8 பேர் ஒன்றிணைந்து -யோகாசனம் செய்தார்கள்.

ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு யோகாசனம் செய்து அதன் பயன்களை கூறினார்கள்.மேலும் பரதநாட்டிய மாணவிகள் 2 பேர் 79 பரதநாட்டிய முத்திரைகளை செய்து சாதனை படைத்தனர்.

இதனை தொடர்ந்து சாதனை நிகழ்வை கண்காணித்த சர்வதேச யுனைடெட் கலாம் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் செந்தூர் பாண்டியன் மற்றும் துணை தலைவர்கள் , விக்னேஷ்வரி , அபிஷா ராஜீ குணசீலன்,ஆகியோர் , சாதனை படைத்த குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் கீர்த்தனா, சரண்யா, சண்முகப்பிரியா மற்றும் சாதனை குழந்தைகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..