துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 3, 11, 12, 13 ஆகிய வார்டுகளுக்கு வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட் 13 ந் தேதி கௌரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து பொது மக்களிடம் மனுக்கள் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இதில் நகர் மன்ற தலைவர் செல்வராணி, துணை தலைவர் மெடிக்கல் முரளி, வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் நகராட்சி ஆணையர் வாசுதேவன்,வட்ட வழங்கல் அலுவலர் முத்து, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ்,காவல் ஆய்வாளர் முத்தையன்,நகர் மன்ற உறுப்பினர்கள் அம்மன் பாபு, கார்த்திகேயன், பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் முரளி, வருவாய் ஆய்வாளர்கள் இளவரசி, சுரேந்திரன்,கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ், திருநாவுக்கரசு, வசந்தமலர், ஒப்பந்ததாரர் வினோத் , ஆட்டோ மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.இம் முகாமில் 15 அரசு துறையினர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
