மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் திரும்பவும் துளுர்விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதிகம் இந்த முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோரும் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமை தீமிதி திருவிழா நடைபெருவது வழக்கம்

அதேபோல் இந்த வருடம் கொடி ஏற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது 10 ம் நாளான இன்று தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது 10 ஆயிரத்திர்க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திகடனை நிவர்த்தி செய்தனர்

அப்பொழுது அங்கு எழுந்தருளிய முத்து மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இந்த தீமிதி திருவிழாவிற்க்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

தீமிதி திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை,சீர்காழி,கொள்ளிடம்,புதுப்பட்டினம் உள்ளிட்ட காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணி தீவிர படுத்தினர் மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன