சீர்காழியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இன்றைய தினம் மாணவர்கள் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினார்கள்

இந்நிகழ்ச்சியில் பள்ளியை சார்ந்த 1500 மேற்பட்ட மாணவ மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியில் பங்கேற்றனர். மேலும் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள், விருந்தினர்கள் என அனைவரும் இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் முரளிதரன் தலைமை ஏற்க,தனி வட்டாட்சியர் பா ரகு, சீர்காழி வருவாய் ஆய்வாளர் கி.மாதவன் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி. சந்தோஷ், காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை பள்ளியின் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் பொறுப்பாளர் வி.முருகபாண்டியன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன்,செயலாளர் விஜயன்,சங்க உறுப்பினர் மணி, கிராம நிர்வாக அலுவலர் மோகன கிருஷ்ணன் சீர்காழி தலைமை காவலர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் என் துளசிரங்கன் நன்றி கூறினார்