பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மருத்துவக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் தேக்கமடைந்து நெல்மணிகள் மழைநீரில் மிதந்து முளைத்து விட்டதால் விவசாயிகள் வேதனை….
ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்……
காவிரி சமவெளி மாவட்டங்களில் கோடை பயிர் சாகுபடி முடிந்து அறுவடை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் தொடர்ந்து பெய்கின்ற மழையின் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மருத்துவக்குடி
நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து விவசாய உடைய நெல் மணிகள் தண்ணீரில் மிதந்து முளைத்துவிட்டன .
தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி இந்திய உணவுக் கழக அலுவலர்களை நேரடியாக கள ஆய்வு செய்ய அழைத்து வந்து விவசாயிகளுக்கு ஈரப்பத பிடித்தம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் ,
தேவையான நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும்
மழையின் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரம் நட்டத்தினை மத்திய அரசு மாநில அரசு இரண்டும் ஈடு கட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் நெல் முளைத்த ஈரப்பதம் மிக்க நெல்லை கைகளில் வைத்துக்கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர் .
