திருச்சி மாநகரில் அதிகம் போக்குவரத்து நிறைந்த பகுதியாக ஒத்தக்கடை முத்தரையர் சிலை சிக்னல் உள்ளது. இந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக சாலையில் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவது தொடர்கிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் ஒத்தக்கடை சிக்னல் பகுதியில் நான்கு பிரிவுகளாக சாலைகள் செல்கிறது

இதில் தலைமை தபால் நிலையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மத்திய பஸ் நிலையத்திற்கு இடது புறம் திரும்பி வில்லியம்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த சாலையில் சிக்னல் அருகே இயங்கி வரும் ஸ்டிக்கர் கடை களி ன் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களில் சாலையின் பாதியை அடைத்து நிறுத்தப்படுகின்றன

வில்லியம்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கன்டோன்மென்ட் செல்ல திரும்பும் இடத்தில் ஒரு வணிக வளாகம் உள்ளது.இதில் ஹோட்டல் செல்போன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள் உள்ளன இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன இதில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சாலையோரம் கயிறு கட்டி வாகனங்களை நிறுத்தி செல்வது ஆக்கிரமிப்பின் உச்சகட்டம்

இதனால் கண்ட்ரோல்மென்ட் பகுதிக்கு திரும்பும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன

இதனால் இப்பகுதியில் உள்ள 50 அடி சாலைகள் அனைத்தும் 20 அடி சாலைகளாக சுருங்கி விடுகின்றன இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர் இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் போலீஸ் பிட் அருகே நடந்தாலும் போலீசார் கண்டு கொள்வதே இல்லை என்றனர்.

எனவே வாகன போட்டிகளின் நலன் கருதி ஒத்தக்கடை சிக்னல் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடிவாளம் போட காவல் துறையினர் முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

திருச்சி செய்தியாளர் அருள்மோகன்