தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளருமான பூக்கடை எஸ் ஆனந்த் அறிக்கையில் குறிப்பிட்டதாவது தமிழக காவல்துறை என்பது ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையானது.
ராணுவத்திற்கு அடுத்தபடியாக உள்ளது சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை நிலை நாட்டுவதில் காவல்துறைக்கு நிகர் வேறு யாரும் கிடையாது ஊரைக் காப்பாற்றும் எல்லைச்சாமியாக இருக்கக்கூடிய காவலரை இப்படி கொலை செய்த செயல் கண்டனத்துக்குரியது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் தினமும் கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது
ஊரைக் காக்கும் காவலர்களின் உயிரையும் விட்டு வைக்கவில்லை இந்த சமூக விரோதிகள் இப்படியே போனால் சமூகம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும்
உடனடியாக சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களின் கொலையாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும்.இதற்கு மேல் யாரும் இப்படி ஒரு சம்பவத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.மேலும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
