கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலை பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் தமிழ், ஆங்கிலம் இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆறு ,ஏழு வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை எழுதுதல் என்ற தலைப்பில் வேற்றுமையில் ஒற்றுமை, நட்பை கொண்டாடுவோம் நம்பிக்கையை போற்றுவோம்,

அமைதிக்கு பாதை அமைப்போம். எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நாட்டின் முன்னேற்றம், பாலின சமத்துவம், சமூக உறவை ஒற்றுமையாக வளர்ப்போம், நாட்டின் விடுதலையில் அமைதியின் பங்கு,என்ற தலைப்புகளின் கட்டுரை போட்டியும், ஆறு,ஏழு வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெரியாரை போற்றும் ஒன்றாய் உயர்வும், சம வாய்ப்பு உருவாக்குதல், கலை வளர்க்கும் தமிழ்நாடு, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இணைவோம் உயர்வோம்,

இளையோரின் ஆற்றல் சமூகத்தின் உயர்வு , இயற்கை பேரிடரில் ஒற்றுமை உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், கவிதை எழுதுதல் என்ற தலைப்பில் நட்பை அழகு, ஒற்றுமை வலிமை, அனைவருக்கும் சமத்துவம், சமத்துவத்தை வளர்ப்போம், ஈதலும் இரக்கமும், உழைப்பால் உயர்வோம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இதே போல் ஆங்கிலத்திலும் இலக்கிய மன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.இலக்கிய மன்ற போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, கணினி ஆய்வக உதவியாளர் தையல் நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.