ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் SDPIசார்பில் அரசியலமைப்பு விரோத வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பில் ஒன்றிணைவோம் UNITED FOR RESISTANCE என்ற முழக்கத்துடன் நேற்று கமுதி முஸ்லீம் பஜார் மீரா திடலில் மாபெரும் வக்ஃப் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு SDPI கட்சி கமுதி நகர் தலைவர் S.அல்லா பிச்சை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் V.N.S.உமர்பாரூக் வரவேற்புரையாற்றினார்.SDPI கட்சி மாநில பொதுச்செயலாளர் A_அபுபக்கர்சித்தீக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வக்ப் திருத்த சட்டத்தின் ஆபத்துக்களை பற்றியும், அதற்கு எதிராக நாம் முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் பற்றியும் விரிவாக எழுச்சியுரையாற்றினார்.

மேலும் SDPI கட்சி மாநில செயலாளர் பாஸ்டர்_Vமார்க் ,சமூக செயற்பாட்டாளர் சத்தியபிரபுசெல்வராஜ், SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் J_நூருல்அமீன் மாவட்ட பொதுச் செயலாளர் Jபாஞ்சுபீர்மாவட்ட செயலாளர் A_கன்சுல்_மஹரிபா,ஆகியோர் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சிறப்புரையாற்றினர்.

எழுச்சிமிக்க இந்நிகழ்வில் SDPI கட்சி விருதுநகர் நகர் மாவட்ட தலைவர் S.V.அலி அஹமது, SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் N.செய்யது இப்றாகிம், மாவட்ட துணைத் தலைவர் மௌலவி I.மீரான் முஹைதீன் மன்பஈ, மாவட்ட செயலாளர்கள் S.காஜா முஹைதீன் மற்றும் R.ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் M.செய்யது சதக்கத்துல்லா, , பரமக்குடி சட்டமன்றத் தொகுதி தலைவர் V.S.ரிஸ்வான் , முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் S.முஹம்மது ரபீக், தொகுதி செயலாளர் சத்தார் மைதீன், பரமக்குடி தொகுதி செயலாளர் M.செய்யது அலி முத்து, கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் N.அண்ணல் முஹம்மது, WIM மாவட்ட துணைத் தலைவர் S.ரசியா பேகம், மாவட்ட செயலாளர்கள் A. ராவியா பீவி மற்றும் N.சம்சு பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

SDPI கட்சி பரமக்குடி தொகுதி அமைப்புச் செயலாளர் M.நவாப் இப்றாகிம் அவர்கள் பொதுக்கூட்ட நிகழ்வுகளை தொகுத்துவழங்கினார்

இந்திய அரசியலமைப்பு சட்ட விரோத வக்ஃப் திருத்த சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய அரசிற்கு கண்டனம் !கமுதி பேரூராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் !

கமுதி பேரூராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் !
கமுதி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் நாய்களை கருணைக்கொலை செய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் !
கமுதி அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் !

கமுதி பேரூராட்சிக்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட வேண்டும் !
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன வக்ஃப் திருத்த சட்டத்தின் அபத்தங்களையும் ஆபத்துக்களையும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இப்பொதுக்கூட்ட நிகழ்வின் நிறைவாக SDPI கட்சி கமுதி நகர் செயலாளர் A.சேக் முஹம்மது நன்றியுரையாற்றினார்.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளை SDPI கட்சி கமுதி நகர் நிர்வாகிகளான , S.முசாபர் கனி, கலிமுல்லாகான், முஹம்மது நஷீர், அப்துல் ரஹ்மான், முஹம்மது இப்றாகிம், செய்யது அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். கூட்டத்திற்கு கமுதி மற்றும் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்துகொண்டனர்