கோவை
ஆதி சைவ சிவாச்சரியர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் என்ற சுந்தரர், ஆதி சைவ சிவாச்சாரியர்களின் குருவாக போற்றப்படுகிறார் இந்நிலையில் பல்வேறு சிறப்பிகளை கொண்ட சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர தினத்தில் , சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் கோவையில் ஆதி சைவ சிவாச்சரியர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆடி சுவாதி நிகழ்வு இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது ஆதி சைவ சிவாச்சரியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் கலிபோர்னியா சுவாமிநாதன் சிவாச்சாரியர் வழிகாட்டுதலின் பேரில், நடைபெற்ற இதில்,மாவட்ட தலைவர் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமை தாங்கினார்..
முன்னதாக சிறப்பு ஹோமங்கள்,ஜப பாராயணங்கள் செய்து, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் செய்யப்பட்டது.
உலக அமைதி வேண்டியும்,அனைவரும் நல்ல உடல் நலன் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இதில்,ஆதி சைவ சிவாச்சாரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், சிவஸ்ரீகள் இளைஞர் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனைவருக்கும் திருவருட் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது…
