மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கோவை கொடிசியா புத்தக கண்காட்சி 2025 நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவ மாணவியரின் பெருந்திரல் புத்தக வாசிப்பு நடைபெற்றது

இதில் 850 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு கோவை சகோதரன் அமைப்பின் தலைவர் ”இயக்காகோ” சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் தலைமை தாங்கினார்.பள்ளி முதல்வர் டாக்டர் உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார், துணை முதல்வர் சக்திவேல் நன்றி உரையாற்றினார்.