குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உதகையில் குழந்தைகள் கடத்தல் போன்ற குற்ற செயல்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சர்வதேச மனித ஆள் கடத்தல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, உலகில் பெரும்பாலான இடங்களில் உடல் உறுப்புகளுக்காகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்காகவும் தான் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படுவதால் மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்தனர்…….

ஜூலை சர்வதேச மனித ஆள் கடத்தலால் பாதிக்கப்படுபவர்களின் நிலை குறித்தும் கடத்தல் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதகையில் சட்டப்பணிகள் ஆணைய குழு சார்பில் நீலகிரி மாவட்ட மகிளா நீதிபதி செந்தில்குமார், கூடுதல் நீதிபதி பாலமுருகன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி நிறுவனர் அனிதா ஆகியோர் தலைமையில் குழந்தைகள் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உலகில் பெரும்பாலான இடங்களில் உடல் உறுப்புகளுக்காகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்காகவும் தான் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். இதனால் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து எந்த ஒரு உணவுப் பொருட்கள் வாங்கி உண்ணக்கூடாது,

தெரியாத நபர்களின் வாகனங்களில் செல்லக்கூடாது அதேபோல் யாராவது நம்மை பின் தொடர்ந்தால் உடனடியாக பெற்றோரின் எண்ணிற்கு அல்லது ஆசிரியர்களின் எண்ணிற்கு தெரியப்படுத்த வேண்டும் பெற்றோர், ஆசிரியர்களின் எங்களை எப்போதும் மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.