மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட விராட்டிபத்து பகுதியில், அகச்சிவப்பு கதிர்கள் மூலம், வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து வாகன விவரங்களை எளிய முறையில் அடையாளம் காணும் வகையிலான, அதி நவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் செயல்படக்கூடிய புதுப்பிக்கப் பட்ட காவல் சோதனைச்சாவடி திறப்பு விழா நடந்தது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடியை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
