திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது விசாலாட்சி உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயில். அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் தேவாரப் பாடல் பெற்ற 61-ஆவது திருத்தலமாகவும், சிவபெருமான், அப்பர் பெருமானுக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதர்மராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும் மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல் வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவர்த்தி செய்யும், பழைமையான, புராதனச் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் ஆடிப் பூரத் திருவிழா ஜூலை 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.