ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் அதிமுகவில் இணைந்தார்!

ராமநாதபுரம் மாவட்டம் ​ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் KBM. நாகேந்திரன் சேதுபதி அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

​நாகேந்திரன் சேதுபதி மறைந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் புதல்வர் ஆவார்.​இந்நிகழ்ச்சியின் போது ராணி லட்சுமி குமரன் சேதுபதி, ராமநாதபுரம் அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் . MA. முனியசாமி மற்றும் அதிமுக மாணவரணி துணைச் செயலாளர் K. செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.