தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026- ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜுலை 1- ந்தேதி “ஓரணியில் தமிழ்நாடு ” செயல் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பின் திமுக கட்சியினர் வீடுவீடாக சென்று “ஓரணியில் தமிழ்நாடு ” திட்டத்தில் பொது மக்களைச் சந்திக்கும் நிகழ்வு தொடங்கியது.

இந்த சந்திப்பின் மூலம் வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் பேரை கட்சியில் சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் திமுக கிளைச் செயலாளர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய துணைச் செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட பிரதிநிதி கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் “ஓரணியில் தமிழ்நாடு ” முகாம் மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.