திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அப்போது பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியில் 2003ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பணிபுரிந்த அண்ணாமலை மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் என்.ராமலிங்கம் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சி.கோவிந்தசாமி, கருணாகரன், புலவர் அங்கையன், தேசூர் பள்ளி தலைமை ஆசிரியர் சி.ரவிச்சந்திரன், சி.ராஜேந்திரன்,வேணு.அரங்கநாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் கணினி ஆசிரியர் பா. சுரேஷ், சிவா, நேரு, பாலாஜி, பிரபு, மாடசாமி , நந்திவர்மன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) சசிகுமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களுக்கு சிறப்புரையும், வாழ்த்துரையும் வழங்கினார்கள். தற்போது இப்பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசாக 390 மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இறுதியில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சாமி.சீனிவாசன் நன்றியுரை கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.