கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா ஆடி திருவாதிரை விழா வருகின்ற புதன்கிழமை சிறப்பாக நடைபெறுகிறது இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா. சொ க கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வாஸ் பாலசுப்பிரமணியம்சாஸ்திரி ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் மணிமாறன் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்