திருவொற்றியூர்.
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர் திருவொற்றியூர் முதலாவது வார்டுக்கு உட்பட்ட சிறப்பு முகாம் எண்ணூர் வியாபாரி சங்கம் திருமண மண்டபத்தில் நடந்தது மண்டல குழு தலைவர் திமு தனியரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை கூறி 740 பேர் உட்பட 1150 மனுக்கள் பெறப்பட்டன
இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம். மைமா அருள்தாசன்.மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு செயற்பொறியாளர் பாபு. பாண்டியன். உதவி செயல் பொறியாளர் நமச்சிவாயம். மற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
அதேபோல் மணலியில் 20 வது வார்டுக்கு உட்பட்ட சிறப்பு முகாமில் 950 மனுக்கள் பெறப்பட்டன இதில் 355 மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை கோரி பெற்றதாக கூறப்படுகிறது இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
