விருத்தாசலம், ஜூலை. 4:
தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆணையின் பேரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரிலும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆலோசனையின் பேரிலும் கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி விருத்தாசலத்தில் நடைபெற்றது. சேலம் ரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து துவங்கிய இந்த நிகழ்ச்சி விருத்தாசலம் நகரம் 24 முதல் 30 வார்டு வரை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை செயலாளர் மாவட்ட அமைப்பாளர் ராமு வரவேற்றார். நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரச்சார இயக்கம் துவங்கியது. முன்னாள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி நகரவைத் தலைவர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் அணி, அறிவுடை நம்பி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்கள் காந்தி, டைலர் சிவா, வழக்கறிஞர் அணி அருள்குமார், தொழிலாளர் அணி கவுன்சிலர் அன்பழகன், நகர துணை செயலாளர் நம்பிராஜன், சந்தான லட்சுமி சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி கவுன்சிலர் பாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் அணி தலைவர் சுரேஷ், துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் வடிவேல், ஆல்ஃபா நெட் சுரேஷ், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் தளபதி, நிஷாந்த், தளபதி குமார், மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி, சமூக வலைதள மாவட்ட துணை அமைப்பாளர் அசோக்குமார், தொகுதி பொறுப்பாளர்கள் கவுன்சிலர் முத்துக்குமார், தீபா மாரிமுத்து, துரை அரசன், விக்கி ஆகியோர் செயலி மூலமாக துவக்கி வைத்தனர்.
வட்ட செயலாளர்கள் பரந்தாமன், சரவணன், மணலூர் முருகன், ராமச்சந்திரம் பேட்டை முருகன், ரமேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வசந்தி புருஷோத்தமன், ராசாத்தி சரவணன், அறிவழகி முருகன், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இளைஞர் அணி வீரமணி, விஜய், வினோத், கார்த்தி, சிம்பு, ஜான்சன், கொளஞ்சி, லட்சுமி, பழனியம்மாள், பாக நிலை முகவர்கள் பாக நிலை டிஜிட்டல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
நகர துணை செயலாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.
