திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 375 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8ஆயிரத்து 559-கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6ஆயிரத்து 500ற்கும் சராசரி விலை ரூ 7ஆயிரத்து 400-கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 4ஆயிரத்து 773மூட்டைகள் , குவிண்டால் ரூ.ஆயிரத்து 591.57பைசா மதிப்பு விகித்தில் மொத்தம் ரூ 1கோடியே 15லட்சத்து 21ஆயிரத்து 866 க்கு ஏலம் போனது.அதில் 14 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்

என , திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்