முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார மையங்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்பித்தார்.
கோவை மாநகராட்சி 63வது வார்டுக்கு ட்பட்ட மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காணொளி காட்சி மூலம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது,
அதனை தொடர்ந்து மரியாதைக்குரிய மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெவ்வன், மத்திய மண்டலம் தலைவர் மீனா லோகு, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் ஆகியோர் முன்னிலையில் இராமநாதபுரம் ஒலம்பஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைத்தனர்.
கோவை மாநகராட்சியில் 21புதிய சுகாதார நிலையங்கள் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு அருகாமையில் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன இந்த மகிழ்வான நிகழ்வில்நகர்நல அலுவலர் மரு.மோகன் , உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி ஆணையாளர் செந்தில் குமரன்,மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள், காயத்ரி மற்றும் மாநகராட்சிஅலுவலர்கள்,மருத்துவர்கள்,செவிலியர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
